Q&A Session | கேள்வி கேட்போம்! கற்போம்! | சாயி வழி சாத்தியமா இன்று? | Swami's Birthday Special
Published on November 22, 2026 01:30 PM
Conversations
ஓம் ஸ்ரீ சாயிராம்!
சாயி பக்தர்களான நாம் அனைவரும் இதயபூர்வமாக ஸ்வாமியிடம் கேட்பது, “ஸ்வாமி எல்லாமே உங்கள் சங்கல்பத்தின்படியாக நடக்கும் போது, ஏன் குழப்பங்கள் மற்றும் மன உளைச்சல்கள் ஏற்படுகின்றன? போட்டி நிறைந்த இவ்வுலகத்தில், அனைவருடனும் சேர்ந்து செயல்படும் சந்தர்ப்பங்களில், உங்கள் அருளுரைகளை பின்பற்றி நடக்க முயற்சிக்கும் போது நாங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறோம், ஏன்? எங்களுக்கு விடை கிடைக்குமா ஸ்வாமி?
இது போன்ற நம் சாயி சகோதர, சகோதரிகளின் கேள்விகளுக்கு, நம் சாயி சகோதரர் ப்ரேம் அனுஷ் அவர்கள், ஸ்வாமியின் அருளுரைகளிலிருந்தும், SSSIHLல் மாணவராக இருந்தபோது தனக்கும், தன்னுடன் இருந்த மற்ற மாணவர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் போன்றவற்றிலிருந்து விடை அளிக்கிறார், வாருங்கள் நாமும் கேட்டு பயனடைவோம்.