Watch - முழுதாய் உணர்ந்தவர் யாரோ? | Muzhudhai Unarndhavar Yaaro? | Swami's Birthday Special Devotional Song - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
முழுதாய் உணர்ந்தவர் யாரோ? | Muzhudhai Unarndhavar Yaaro? | Swami's Birthday Special Devotional Song
Published on November 20, 2026 02:30 PM
Songs
‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்’ எனச் சேக்கிழாரும், ‘நினைவு அரியவன்’ என நம்மாழ்வாரும் ‘திருவாய்மொழி’ந்த ஒன்றை, அயனும் அரியும் காண இயலாத மறைபொருளை, நாம் கண்டுணர முயற்சிக்காமல், நம் அம்மை அப்பனாகிய சத்ய ‘ச+ஆயி+பாபா’வினை இப்பாடலால் போற்றி, அவர் போதித்த பாடத்தை மட்டும் கடைப்பிடித்தால் போதும்; அவர் தம்மையே நமக்குத் தந்தருள்வார் எப்போதும்!
LYRICS:
பல்லவி
முழுதாய் உணர்ந்தவர் யாரோ? சாயி உன்னை
முழுதாய் உணர்ந்தவர் யாரோ?
சரணம் 1
பார்த்தனுக்குக் கீதை சொன்ன பரந்தாமா, இங்கு
பாலனுக்குப் பாடம் சொன்ன மாயம் என்னவோ! (முழுதாய்…)
சரணம் 2
அங்கேயும் இங்கேயும் எங்கெங்கும் நிறைந்திருந்தும்,
அன்பர் மனதிற்குள்ளே அடங்கி ஒடுங்கும் உன்னை (முழுதாய்…)
சரணம் 3
அம்மையாய் அப்பனாய் அம்மையப்பனுமாகி
இம்மையில் எனக்கும் இன்னருள் பொழியும் உன்னை (முழுதாய்…)
சரணம் 4
கொண்டது எந்தனை கொடுத்ததோ உந்தனை
என்ன கணக்கோ இது ஏதும் புரியாது (முழுதாய்…)
MEANING
Pallavi
Who has truly known You, O Sai, in Your entirety?
Who has truly known You?
Charanam 1
O Supreme Lord, who taught the Bhagavad Gita to Arjuna,
What wondrous mystery is this that You teach a child here?
Charanam 2
Though You pervade everywhere, here, there, and all around,
Yet You abide within the hearts of Your devotees.
Charanam 3
As You are verily the Mother, the Father, and the Divine Parent,
You shower Your boundless grace upon me in this very life.
Charanam 4
You took me unto Yourself and gave Yourself to me;
What manner of reckoning is this? It’s incomprehensible.
ESSENCE OF THE SONG
The song expresses the devotee’s wonder at Sri Sathya Sai’s infinite nature and loving presence within every heart. It celebrates His boundless grace as the Divine Mother and Father, drawing the devotee to Himself and giving Himself in return.