பயிற்சிக்காக வெளியூர் சென்றிருந்தபோது அங்கு தற்செயலாக பகவான் பாபாவைப் பற்றிய புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அது ஒன்றும் மனதைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் மனதிலோ இந்த பாபா கடவுளா அல்லது ஏமாற்றுப்பேர்வழியா என்னும் சந்தேகம் ஊசலாடிக்கொண்டுதான் இருந்தது.
சிறிதுகாலத்திற்குப் பிறகு ஏற்பட்ட சில சம்பவங்கள்தாம் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டன. அவர்கள் சந்தேகம் தீர்ந்ததா இல்லையா? இந்திய வருவாய்ப் பணி உயரதிகாரியான Dr வனிதா வைத்தியலிங்கம் IRS அவர்களும், இந்திய இரயில்வேயின் உயரதிகாரியான திரு. வைத்தியலிங்கம் IRS அவர்களும் பகிர்ந்துகொள்ளும் சுவாரஸ்யமான அனுபவங்களைக் கேட்டுப் பாருங்களேன்!
IRS தம்பதியரின் ‘ஆத்மார்த்த அனுபவங்கள்’ - முதல் பகுதி, உங்களுக்காக!