அபிராமி அந்தாதி | Introduction | Navaratri Special Series
Published on October 10, 2026 02:30 PM
Conversations
ப்ரக்ருதி ஸ்வரூபமான தேவியைக் கொண்டாடுவதற்கு மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படும் நவராத்திரி நாட்களில், திவ்ய க்ஷேத்ரமான புட்டபர்த்தியில் வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களால் 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி வைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த நவராத்திரியின் சிறப்பு வெளியீடாக நம் ஸ்ரீ சத்ய சாயி தமிழ் சேனல், மஹோன்னதமான பக்தரும், ஸ்ரீவித்யா உபாசகருமான ஸ்ரீ அபிராமி பட்டர் அவர்களால் பாடப்பெற்று, 100 பாடல்களைக் கொண்ட “அபிராமி அந்தாதி“யிலிருந்து - ஒன்பது நாட்களில் தினமும் ஒரு பாடலுக்குப் பொருளும், அதில் பொதிந்துள்ள கருத்தும் சிறுசிறு கதைகளின் மூலம் எளிமையான முறையில் விளக்கப்பட்டு, இனிய இசை வடிவில் நம் சாயி ஜகன்மாதாவின் திருவடியில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாமும் அதைக் கேட்டு, பார்த்து, பக்திக்கே வசமாகும் தேவியைப் பூஜித்து நல்லருள் பெறலாம்.