Highlights | வேத புருஷ ஸப்தாஹ ஞான யக்ஞம் | Veda Purusha Saptaha Jnana Yajna
Published on October 20, 2026 12:30 PM
Mandir/LIVE Events
ஓம் ஸ்ரீ சாயிராம்!
ஸ்வாமியின் பரிபூரண ஆசீர்வாதத்துடன், பிரசாந்தி நிலையத்தில் ஏழு நாட்களாக நடந்து வந்த “வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்” விஜயதசமி நன்னாளான இன்று மஹாபூர்ணாஹுதியுடன் நிறைவுபெற்றது. இந்த ஏழு நாட்களிலும் ருத்ர ஹோமம், சஹஸ்ர லிங்கார்ச்சனை, சூரிய நமஸ்காரம், லலிதா ஸஹஸ்ரநாம குங்கும அர்ச்சனை, ராமாயணம், மகாபாரதம் மற்றும் தேவி மாஹாத்மியம் ஆகிய புனித நூல்களும் பாராயணம் செய்யப்பட்டன. பிறகு கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரானது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்களுக்கு சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டது. இந்த புனிதமான தருணங்கள் இக்காணொளியின் மூலம் பகிரப்படுகிறது. நாமும் இருக்கும் இடத்தில் இருந்தபடியே இந்த தெய்வீக அனுபவங்களை பெற்று சாயிமாதாவின் பரிபூரண ஆசீர்வாதத்தினை பெறுவோம். சாயிராம்!
No suggested content found.
Watch - Highlights | வேத புருஷ ஸப்தாஹ ஞான யக்ஞம் | Veda Purusha Saptaha Jnana Yajna - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre