Watch - ஸ்ரீ சத்ய சாயி கருணாம்ருத காவியம் - Harikatha Presentation | Parthi Yatra | Kanchi North, Tamil Nadu - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
ஸ்ரீ சத்ய சாயி கருணாம்ருத காவியம் - Harikatha Presentation | Parthi Yatra | Kanchi North, Tamil Nadu
Published on May 06, 2026 12:30 PM
Mandir/LIVE Events
செப்டம்பர் 2025-ஆம் ஆண்டு, நம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தெய்வீகச் சந்நிதியில் காஞ்சி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை பக்தர்கள் ஒன்றுகூடி, பர்த்தி யாத்திரையை மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக, "ஸ்ரீ சத்ய சாயி கருணாம்ருத காவியம்" எனும் தலைப்பில் ஹரிகதாவினை அம்மாவட்டத்தின் சாயி யுவதிகள் ஸ்வாமியின் திருச்சந்நிதியில் சமர்ப்பித்தனர்.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, நமக்கு மாதா, பிதா, குரு மற்றும் தெய்வமாகத் திகழ்ந்து அருள் பாலிக்கின்றார் என்பதைச் சில சம்பவங்களின் வாயிலாகக் கதை வடிவில் எடுத்துரைத்து, அவற்றுக்கேற்ப பாடல்களையும் பாடினர்.
இவற்றையெல்லாம் ஹரிகதா வடிவில் பகவானின் திருவடிகளில் அவர்கள் சமர்ப்பித்த நேர்த்தியைக் கண்டு, அங்கு கூடியிருந்த பக்தர்கள் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர்.
வாருங்கள், ஈஸ்வரம்மா தினமான இன்று நாமும் அந்த ஆனந்தத்தில் பங்கேற்போம்!