Global Akhanda Bhajan Satsang | ஸ்வாமி இதயத்தில் ஒலித்த பஜன் | Swami's Birthday Special
Published on November 10, 2026 02:30 PM
Conversations
ஓம் ஸ்ரீ சாயிராம்!
வாரம்தோறும் வியாழக்கிழமைகளில், ஒரு குறிப்பிட்ட பக்தர்களின் வீடுகளில் குடும்ப பஜனையாக ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒரு வருடம் பல இன்னல்களையும், சோதனைகளையும் தாண்டி இடைவிடாமல், ஸ்வாமியின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் நடந்து முடிந்தபடியால், அவர்கள் ஒரு அகண்ட பஜனையை வைக்க திட்டமிட்டு ஸ்வாமியிடம் அனுமதி பெற சென்றனர். அப்போது “மனமிருந்தால் போதும் ஸ்வாமியே மார்கத்தை காட்டியருளுவார்” என்பதற்கேற்ப ஸ்வாமி நடத்திய அற்புத லீலைகள் மிகவும் சுவாரஸ்யமானது. அப்படி ஆரம்பிக்கப்பட்ட அகண்ட பஜனையானது, சில வருடங்களுக்கு பிறகு உலகெங்கும் உள்ள அனைத்து சாயி சென்டர்களிலும், ஒரே நேரத்தில் வருடந்தோறும், “GLOBAL AKHANDA BHAJAN” ஆக இனிமேல் நடைபெறும் என்று ஸ்வாமியால் அறிவிக்கப்பட்டது. மேலும், அனைவரும் ஒருங்கிணைந்து குழுவாக பாடும் போது என்ன மாதிரியான பஜனை பாடல்களை நாம் தேர்ந்தெடுத்து பாட வேண்டும்? பஜனை பாடுவதற்கான விதிமுறைகள் என்னென்ன? ஒவ்வொரு பஜனைக்குள்ளும் பொதிந்திருக்கும் இரண்டு முக்கிய அம்சங்கள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கு நம் சாயி சகோதரிகள், ஸ்வாமியிடமிருந்து கிடைத்த அனுபவங்களை எடுத்துக்காட்டி பதிலளிக்கிறார்கள். வாருங்கள் நாமும் அந்த அற்புதமான தருணங்களை கேட்டு மகிழ்வோம். சாயிராம்!!!