ஸ்வாமி நீங்க என் Friend! | Mr R Rajagopal | ஆத்மார்த்த அனுபவங்கள் | Part 1
Published on October 30, 2026 12:30 PM
Conversations
ஓம் ஸ்ரீ சாயிராம்
Mr R Rajagopal அவர்கள், ஸ்ரீ சத்ய சாயி கல்வி நிறுவனத்தில் 7 வருட காலம் படிக்கும் வாய்ப்பு பெற்று முதுகலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் Waiting Period அனுபவமும் பெற்றிருக்கிறார். அவர் சுந்தரம் பஜன் குரூப்பில் சுமார் 30 வருட காலமாக தபலா வாசித்து வருகிறார். சனாதன சாரதியில் வந்த ஸ்வாமியின் அருளுரைகள் மற்றும் செய்திகளை படித்ததில், ஸ்வாமியின் பால் ஈர்க்கப்பட்டு, அவர் பெற்றோர்கள் சாயி பக்தர்கள் ஆனார்கள். “ஸ்வாமி என் பிரச்சினையை தீர்த்து வைப்பாரா?” என்றவருக்கு ஸ்வாமி கொடுத்த இன்ப அதிர்ச்சி என்ன? மேலும் அவர் மாணவராக இருந்தபோது “ஸ்வாமி நீங்க என் Friend” என்று சொல்லி ஸ்வாமியின் போட்டோவை பார்த்து சிரித்துவிட்டு போனவருக்கு, மாலை தரிசனத்தின் போது, ஸ்வாமி எவ்வாறு அவருக்கு ஏற்பு தெரிவித்தார், காத்திருப்பு காலங்களில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள் என்னென்ன போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை, இந்த ஆத்மார்த்த அனுபவங்கள் தொடரின் முதல் பகுதியில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வாருங்கள் நாமும் அதை கேட்டு மகிழ்வோம்.