ஓம் ஸ்ரீ சாயிராம்!
"பிரேம பிரபந்தம்" தொடரின் அடுத்த பகுதியான இன்று நாம் அனுபவிக்கவுள்ள பாசுரம், 'அஞ்சு குடிக்கொரு சந்ததியாய்'த் தோன்றி, பக்தி நெறியை வாழ்ந்து காட்டிய ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழியின் 11-ஆம் திருமொழி, 10-ஆம் பாசுரமான 'செம்மையுடைய திருவரங்கர்' என்னும் பாசுரம்.
பகவான் பக்தர்களின் மீது வைத்திருக்கும் மாறாத அன்பை அவனுக்கு நினைவூட்டி, தன் தந்தையான பெரியாழ்வாரை ஆட்கொள்ளுமாறு ஆண்டாள் இதில் வேண்டுகிறாள்.
பக்தர்களைக் காக்கும் பொருட்டு பகவானிடம் பரிந்து பேசும் ஆண்டாளின் பாங்கு, அவள் பக்தர்கள் மீது கொண்ட பேரன்பிற்குச் சான்றாகும்.
வாருங்கள்!
இப்புரட்டாசி மாதத்தில் நாமும் ஆண்டாள் நாச்சியாரின் வழியிலேயே, சாயி அன்னையின் அளவிட முடியா அன்பை நம் இதயத்தில் கொணர்ந்து கொண்டாடுவோம்!
-------------
பாசுரம்:
செம்மையுடைய திருவரங்கர்தாம்பணித்த
மெய்ம்மைப்பெருவார்த்தை விட்டுச்சித்தர்கேட்டிருப்பர்
தம்மையுகப்பாரைத் தாமுகப்பரென்னும்சொல்
தம்மிடையேபொய்யானால் சாதிப்பாராரினியே?