ஓம் ஸ்ரீ சாயிராம்!
"பிரேம பிரபந்தம்" தொடரின் மூன்றாவது பகுதியான இன்று, ”பெரியாழ்வார் திருமொழி"யின் நான்காம் பத்து, பத்தாம் திருமொழி, முதல் பாசுரத்தை (4.10.1) நாம் அனுபவிக்க உள்ளோம்.
மூப்பு, பிணி போன்றவை சூழும் போது, இறைவனைத் துதிக்கவோ இறைவனின் புகழைப் பாடவோ இயலாது. எனவே நாம் ஆரோக்கியமான உடல் நிலையில் இருக்கும் போதே, அவனே நம்மைக் காக்கும் சாமர்த்தியம் உள்ளவன் என்பதை உணர்ந்து, அவனைக் குறித்துத் துதி செய்யவேண்டும் என்பதனை "துப்புடையாரை யடைவதெல்லாம்” என்னும் பாசுரத்தின் மூலம் பெரியாழ்வார் நமக்கு உணர்த்துகிறார்.
வாருங்கள்!
இப்புரட்டாசி மாதத்தில் இப்பாசுரத்தைச் செவிமடுத்து நம் சாயி நாராயணனின் அனுபவத்தில் திளைப்போம்!
-------------
பாசுரம்:
துப்புடையாரை யடைவதெல்லாஞ் சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தே னானைக்குநீ யருள்செய்தமையால்
எய்ப்பென்னை வந்து நலியும்போதங்கேது யானுன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தே னரங்கத் தரவணைப்பள்ளியானே