ஓம் ஸ்ரீ சாயி ராம்!
இந்த புரட்டாசி மாதத்தில் ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்களில் சிலவற்றை "பிரேம பிரபந்தம்" தொடரில் நாம் சேவித்து வருகிறோம்.
அதன் இரண்டாவது பகுதியான இன்று, அடியார்கள் குழாமும், திருமார்பில் ஸ்ரீதேவியும் சூழ அருள்பாலிக்கும் ஸ்ரீமன் நாராயணனைப் பல்லாண்டு காலம் பிரியாமல் இருக்க வேண்டும் என்று பெரியாழ்வார் வேண்டும் திருப்பல்லாண்டின் இரண்டாவது பாசுரத்தின் சுவையை அனுபவிக்கலாம்.
வாருங்கள்!
இப்புரட்டாசி மாதத்தில் ஸ்ரீமன் நாராயணனின் அனுபவத்தில் திளைத்து நம்மை பகவான் ஸ்ரீ சாயி நாராயணனுக்கே அர்ப்பணம் செய்வோம்!
------------------------------
பாசுரம்:
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றியாயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வளமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைப்போர்புக்குமுழங்குமப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே