ஓம் ஸ்ரீ சாயிராம். இன்று தொடங்கும் புரட்டாசி மாதம், பகவான் ஸ்ரீமன்
நாராயணனை பக்தர்கள் கொண்டாடும் புனிதமான மாதம். அந்தப்
பரவசத்தில் நாமும் பங்கேற்க, பக்த பராதீனனான ஸ்ரீமன் நாராயணனின்
திவ்ய பிரபந்தங்களில் மிளிரும் பிரேம தத்துவங்களை, பகவான் ஸ்ரீ சத்ய
சாயி பாபாவின் அருளோடு அனுபவிக்க உள்ளோம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான
பெரியாழ்வார், பொங்கும் பரிவால் பகவானுக்குப் பல்லாண்டு பாடினார்.
பிரணவத்தின் பொருளாகவே ஸ்ரீவைஷ்ணவ உரையாசிரியர்களால்
கொண்டாடப்படும் திருப்பல்லாண்டின் முதல் பாடலிலிருந்தே நமது
புரட்டாசி மாதக் கொண்டாட்டங்களைத் தொடங்குவோம்.
வாருங்கள்!
இன்று தொடங்கி, ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களுள் சிலவற்றின்
சுவையான அனுபவத்தை, "பிரேம பிரபந்தம் " என்னும் இத்தொடரின்
மூலம் நம் சாயி நாராயணனுக்கு அர்ப்பணிப்போம்! ஆழ்வார்களின்
பிரேமையில் நாமும் திளைப்போம்!
பாசுரம்
—-----------------
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்டோள் மணிவண்ணா! உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு
—-----------------