என்ன சொல்லி அழைத்தால்...| Enna Solli Azhaithal | Swami's Birthday Special Devotional Song
Published on November 05, 2026 01:30 PM
Songs
இயற்றி உருவாக்கியவர்: திருமதி ப்ரபா ராமன் (W/o Late Sri.G.K.Raman, former Convenor, Sri Sathya Sai Trust, Tamil Nadu)
பாடியவர்: கார்த்திகா வைத்தியநாதன்
Lyrics: Mrs Prabha Raman
Singer: Karthika Vaidyanathan
'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ’ என்று தைத்திரீய உபநிடதமும், ‘சொற்பதம் கடந்த தொல்லோன்’ என மணிவாசகரும் போற்றிய, சொற்களுக்கும் மனதிற்கும் அறிவிற்கும் அப்பாற்பட்ட பரமனை, சாயிநாதனை, என்னவென்று அழைத்தால் கடைக்கண் காட்டி நம்மைக் கடைத்தேற்றுவான்?
பக்தியால் தோய்ந்த உள்ளத்தின் ஏக்கமும் வெளிப்பாடும்தான் இப்பாடல். காலத்தைக் கடந்த சத்ய சாயி திருஅவதாரத்தை, நம் மனம் விரும்பிய பெயரால் மனமுருகி அழைத்து, நம் இதயத்தில் இருத்திக் கொண்டாடுவோம்! பிறவிப் பயனை அடைவோம்!
LYRICS:
என்ன சொல்லி அழைத்தால் எமைப் பார்ப்பாய் சாயீ
ஏங்கும் எம் மனநிலையை நீ அறியாயோ
பிழை பல செய்தாலும் உன் பிள்ளைகள் யாமன்றோ
பிறிதோர் இடமுண்டோ நின் திருவடி அன்றி (என்ன சொல்லி...)
அம்மை என்றழைக்கவா, அப்பன் என்றழைக்கவா
அநாத ரட்சகனே அன்பன் என்றழைக்கவா
ஆயிரம் நாமமதில் அருமையாய் உனை அழைக்க
ஆசை கொண்டோம் எந்தன் ஆருயிரே உன்னை (என்ன சொல்லி...)
MEANING:
What must we call You, O Sai, for Your eyes to turn toward us?
Aren’t You aware of how our hearts yearn for You?
Though we may falter many times, aren’t we Your children?
Where else can we go, for we have no refuge other than Your holy feet.
Should we call You our Mother, or our Father?
Should we call You the Saviour of the helpless, or our ultimate Beloved?
Among Your thousand names, to choose one and call You beautifully,
Our hearts deeply yearn, O the very life of our souls!
ESSENCE OF THE SONG:
The song expresses the devotees’ longing for Sai’s loving glance and grace. Despite their shortcomings, they seek refuge only at His Divine Lotus Feet, yearning to call Him by any one of His thousand names, as their Mother, Father, Saviour, and Beloved, for He is their very life.